கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொன்றவர்கள் விரைவில் கைது: பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

0
181

கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயம் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த கனேடியரைக் கொலை செய்த நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் மாதம் 18ஆம் திகதி சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டார்.

கனடாவில் கனேடியரைக் கொன்ற நபர்கள் விரைவில் கைது: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல் | The Issue Of Killing A Canadian In Canada

கனேடியரான நிஜ்ஜர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நிஜ்ஜரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய ஊடகமான The Globe and Mail வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் நிஜ்ஜரை இரண்டு பேர் சுட்டுக் கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய அந்த இருவரையும் பொலிசார் பல மாதங்களாக கண்காணித்து வருவதாகவும் அவர்கள் விரைவில் கனடா பொலிசாரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.