திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய விஜயகாந்தின் படங்கள்.. அவர் மறைந்தாலும் அவர் சாதனைகள் மறையாது

0
139

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

திரைப்பட வாழ்க்கை
1978 ஆம் ஆண்டு திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய விஜய்காந்த் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்களில் பல படங்கள் மிகப் பெரிய வெற்றியை சந்தித்தது.

அதில் மிகவும் முக்கியமான படங்கள் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. மட்டுமல்லாமல் ரெக்கார்ட் வைத்துள்ளது. அந்த படங்கள் எந்த ஆண்டு வெளியாகியது. எத்தனை நாட்கள் திரையரங்கில் ஓடியது என்று தெளிவாக பார்ப்போம்.

அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள் இதோ..
1992 ஆம் ஆண்டு வெளியான ”சின்ன கவுண்டர்” திரைப்படம் ‘315’ நாட்கள் ஓடியது.
– 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ”கேப்டன் பிரபாகரன்” திரைப்படம் “300” நாட்கள் ஓடியது.
– 1991 ஆம் ஆண்டு வெளியான “மாநகர காவல்” திரைப்படம் “230” நாட்கள் ஓடியது.
– 1990 ஆம் ஆண்டு வெளியான “புலன் விசாரணை” திரைப்படம் “220” நாட்கள் ஓடியது.
– 1988 ஆம் ஆண்டு வெளியான “பூந்தோட்ட காவல்காரன்” திரைப்படம் 180 நாட்கள் ஓடியது.
– 1988 ஆம் ஆண்டு வெளியான “செந்தூரப்பூவே” திரைப்படம் 186 நாட்கள் ஓடியது.