டெல்லியில் வரலாறு காணாத பனிமூட்டம்: 110 விமானங்கள் தாமதம்

0
145

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடுமையான பனிமூட்டம் காரணமாக, புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து இன்று காலை முதல் பல்வேறு இடங்களுக்குப் புறப்பட வேண்டிய மற்றும் வரவேண்டிய 110 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து, பயணிகள் அந்தந்த விமான சேவை நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுளள்து.

மேலும், டெல்லி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் 25 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.