அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட அபிவிருத்தி கூட்டம்!

0
191

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இந்த வருடத்திற்கான இறுதிக் கூட்டம் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவர் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இன்று (27) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு முன்மொழியப்பட்டு நடைமுறை படுத்தப்பட்ட திட்டங்களும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஏற்கனவே மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் மேலும் முன்மொழிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி கோருவதுடன் மாவட்டத்தில் இதுவரை தீர்வுகள் காணாது இருக்கின்ற பிரைச்சினைகளை இனம்கண்டு அதற்கான தீர்வினை கானுவது மற்றும் தனியார் நிறுவனங்களை இணைத்து, ஒருங்கிணைந்து மாவட்டத்திற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுகின்றது.

விசேடமாக எதிர்வரும் ஜனவரி மாதம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகைதரும் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களது வருகையை எமது மக்களுடைய முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது தொடர்பிலும் ஆராயப்படுகிறது .
மேற்படி கூட்டத்தில் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களகங்களின் அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள்,பொலிஸார்,இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்