இந்தியப் பெருங்கடலில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்: கப்பலின் கட்டமைப்புகளுக்குச் சேதம்

0
129

இந்தியப் பெருங்கடலில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கப்பல் இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பல், இந்தியாவின் வெர்வால் அருகே ஆளில்லா வான்வழி வாகனத்தைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. லைபீரிய கொடியிடப்பட்ட இந்தக் கப்பல் இரசாயன் தாயாரிப்புகளை கொண்டுச் சென்றதாக கூறப்படுகின்றது.

கப்பலின் சில கட்டமைப்புகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறாயினும் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தக் கப்பல் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா வரவிருந்ததாக கூறப்படுகின்றது.