தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது, ஸ்டாலின் டெல்லி சென்றது எதற்காக..!

0
139

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது, ஸ்டாலின் டெல்லி சென்றது ஏன்? என்று வினவியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

தென்தமிழக மாவட்டங்கள் சந்தித்த பாதிப்புகளை குறித்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

nirmala-seetharaman-questions-mk-stalin-in-flood

அப்போது பேசிய அவர், ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய 800 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர் என்று தெரிவித்து, வெள்ளத்தில் சிக்கித்தவித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர் என்றார்.

பேரிடர் நிதியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறிய அவரிடம், தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு தரவில்லை என முதல்வர் குற்றம்சட்டியது குறித்து வினவிய போது, தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது முதல்வர் எங்கு இருந்தார் என்று கேட்டு, இந்தியா கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின் போகிற போக்கில் பிரதமரை சந்தித்து பேசினார் என்று விமர்சனம் செய்தார்.

nirmala-seetharaman-questions-mk-stalin-in-flood

ஆனால், இரவு நேரம் என்றாலும் பிரதமர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கினார் என்று தெரிவித்து, மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போது முதல்வருக்கு இந்தியா கூட்டணியுடன் ஆலோசனைதான் முக்கியமாகிவிட்டதா? என சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.

nirmala-seetharaman-questions-mk-stalin-in-flood

அதே நேரத்தில் தமிழக அரசு தரப்பில் இந்த வெள்ள – மழை பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர், தற்போது தேசிய பேரிடராக அறிவிக்கும் முறை தற்போது இல்லை என குறிப்பிட்டு, எந்த மாநிலங்கள் பெரும் பாதிப்பினை சந்தித்த போதும் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்று விளக்கமளித்தார்.,