காசா மக்களுக்கு தற்காலிக கனேடிய விசா..! எதிர்வரும் ஜனவரி முதல் நடைமுறை

0
133

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நீதித்துவரும் நிலையில் கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது.

எனினும் , இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது எனவும் கனடா தெரிவித்துள்ளது.

2024 ஜனவரி முதல் நடைமுறை 

இந்த திட்டம் 2024 ஜனவரி 2ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக  குடிவரவு மந்திரி மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர கனடா அரசங்கம் கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

காசா மக்களுக்கு தற்காலிக விசா; கனடா விடுத்த அறிவிப்பு! | Temporary Visa For Gazans Announcement Canada

கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும். இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு வருவார்கள் எனத் தெரியாது.

காசா மக்களுக்கு தற்காலிக விசா; கனடா விடுத்த அறிவிப்பு! | Temporary Visa For Gazans Announcement Canada

ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களை காசாவில் இருந்து வெளியேற்றுவது மிகவும் கடினமானது என்றார்.

அதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் , போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.