‘மெர்ரி கிறிஸ்மஸ்’ ட்ரெய்லர் வெளியீடு: எதிர்பார்ப்பை எகிற வைத்த விஜய் சேதுபதி

0
104

‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகின்றது. கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.

ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் நேற்று மாலை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.