தலைமுடி மற்றும் உள்ளாடைக்குள் ரூ.9 கோடி மதிப்பிலான போதைப்பொருள்..! பெண் அதிரடி கைது

0
124

தலைமுடி விக் மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ.9 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் சோதனை

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கம்போல அதிகாரிகள் பயணிகளிடம் சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு, உகாண்டா நாட்டு பெண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையை மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு போதைப்பொருள் சிக்கியது.

ரூ.9 கோடியில் போதைப்பொருள்

mumbai airport

சோதனை மேற்கொண்டதில் அந்த உகாண்டா நாட்டு பெண்ணின் தலைமுடி விக்கில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த பெண், உள்ளாடைக்குள் மறைத்து வைத்தும் போதைப்பொருளை கடத்த முயன்றுள்ளார். பின்னர், போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், பெண்ணை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.