அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு

0
109

இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ராமாலய சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு புத்த மத தலைவர் தலாய் லாமா முதல் பிரபல தொழிலதிபர் அதானி வரை பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

அதன்படி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் மற்றும் நாட்டின் ராணுவ அதிகாரிகள் அழைப்பிதழ் பட்டியலில் உள்ளனர்.

விருந்தினர் பட்டியலில் திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா, பாபா ராம்தேவ், அதானி குழுமத்தின் தொழிலதிபர்கள் கெளதம் அதானி, ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தின் நடராஜன் சந்திரசேகரன், எல்&டி குழுமத்தின் எஸ்என் சுப்ரமணியன், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீட்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.