அதிக தக்காளி சாஸ் உயிருக்கு ஆபத்தா..!

0
134

தக்காளி சாஸ் சுவைக்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் அடிமையாகி விட்டார்கள் என கூறினால் அது மிகையாகாது..!

ஆரம்பத்தில் ஸநாக்ஸ் வகைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட தக்காளி சாஸ் பின்னர் மெல்ல மெல்ல சப்பாத்தி, பிரெட் , நூடுல்ஸ் என விரும்பி சாப்பிடுகிற அத்தனை உணவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவர்களின் கூற்றுபடி, பாட்டிலில் அடைக்கப்பட்ட கெட்சப்களில் அவை கெட்டுப் போகாமல் இருப்பதற்கான அதிக அளவில் பதப்படுத்திகளும் ரசாயனப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன.

இந்த ரசாயனப் பொருள்கள் உடலுக்குத் தீமை செய்கிறதே தவிர நன்மை செய்வது கிடையாது.

இதை அதிகம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

கார்ன் சிரப், கெட்சப் போன்றவை உடலில் ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்கச் செய்வதால் இதய நோய் பாதிப்புக்கு வாய்ப்பு அதிகம்.

அதிக அளவிலான சோடியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அது சிறுநீரகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.