கருப்பை மாற்று சத்திரகிசிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்; உலகின் கவனத்தை ஈர்த்த குழந்தை!

0
112

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவர் கருப்பை மாற்று சத்திரகிசிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தனது தாயரின் கருப்பையை பெற்றுக்கொண்ட கேர்ஸ்டி பிரையன்ட் என்ற பெண்மணியே கருப்பை மாற்று சத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

16 மணிநேரம் இடம்பெற்ற கருப்பை மாற்று சத்திரகிசிச்சை

கடந்த ஜனவரியில் 16 மணிநேரம் இடம்பெற்ற கருப்பை மாற்று சத்திரகிசிச்சை உலகினதும் மருத்துவ உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. கருப்பை மாற்று சத்திரகிசிச்சை நிகழ்ந்து மூன்று மாதத்தின் பின்னர் கேர்ஸ்டி பிரையன்ட் கருத்தரித்தார். இந்நிலையில் பிரையன்ட் தனது ஆண் குழந்தைக்கு ஹென்றி என பெயர் சூட்டியுள்ளனர்.

கருப்பை மாற்று சத்திரகிசிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்; உலகின் கவனத்தை ஈர்த்த குழந்தை! | Australia S First Uterus Transplant Recipient Baby

ஆரோக்கியமான அழுகையுடன் புதிய வரலாற்றை படைக்கின்றேன் என்ற உணர்வுடன் ஹென்றி பிறந்தான் என மருத்துவர் ரெபேக்கா டீன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது 25 வருட கூட்டு ஆராய்ச்சியின் பலாபலன் என தெரிவித்துள்ள மருத்துவர் சர்வதேச அளவில் விடாமுயற்சியின் உச்சக்கட்டம் என்றும், இதன் காரணமாகவே அவுஸ்திரேலியாவில் இவ்வாறான முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.