’லால் சலாம்’ படத்தின் முதல் பாடலான ’தேர் திருவிழா’ வெளியானது: மிரட்டிய இசைப்புயல்

0
117

லால் சலாம் படத்தின் முதல் சிங்கிலான ‘தேர் திருவிழா’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த மாதம் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.

பொங்கல் தினத்தில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிலான தேர் திருவிழா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள இந்த தேர் திருவிழா பாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.