ஐரோப்பாவில் இஸ்லாமிய கலாசாரத்திற்கு இடமில்லை: இத்தாலி பிரதமர்

0
110

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இஸ்லாம் பற்றி வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாகரீகத்தில் இஸ்லாமிய கலாசாரத்திற்கும் அதன் மதிப்புகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதாகவும் இதனால் ஐரோப்பாவில் இஸ்லாத்திற்கு இடமே இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சவூதி அரேபியா மற்றும் ஷரியா சட்டங்களின் கடுமையான தன்மை குறித்தும் மெலோனி விமர்சித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் நமது ஐரோப்பிய நாகரிகத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. சவுதி அரேபியா, இத்தாலியில் பல இடங்கள் உள்ள இஸ்லாமிய மையங்களுக்கு நிதி வழங்குகின்றது.

அது தவறு. எனக்கும் அந்த விடயத்தில் ஒருமித்த கருத்து இல்லை. அத்துடன் ஷரியா சட்டத்தின் கீழ் மத துரோகம் மற்றும் ஓரினச்சேர்க்கை போன்ற நடைமுறைகள் கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன.

ஐரோப்பாவில் இஸ்லாமிய நாகரீகத்தின் மதிப்புகளுக்கு இடையில் பல வேறுபாடுகள் இருப்பதால், ஒற்றுமை தொடர்பான பிரச்சினை ஏற்படுகிறது என ஜியோர்ஜியா மெலோனி கூறியுள்ளார்.