திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய கோலி – அனுஷ்கா தம்பதி

0
147

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி நேற்று தங்களது 6ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு ஷாம்பு விளம்பரத்தின் மூலமாக தான் முதன் முதலில் இருவரும் சந்தித்தனர்.

அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்படவில்லை, நண்பர்களாக இருந்த கோலியும் அனுஷ்காவும் பின்னாளில் காதலில் விழுந்து திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.

Photo Credit: Instagram

இந்த நிலையில் திருமண நாளை மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தம்பதி தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.