வழுக்கி விழுந்த மாயா! ஒரே அசிங்கமா போச்சு குமாரு

0
137

மாயா வழுக்கி விழும் காணொளியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். சுமால் பாஸ் வீட்டில் இருக்கும் விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிடம் பேசிக்கொண்டிருந்த மாயா தான் எப்படி ஓடுகிறேன்னு பாருங்க என சொல்லி கார்டன் ஏரியாவில் வேகமாக ஓடினார்.

மழைபெய்து அங்குள்ள வழித்தடத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததை கவனிக்காமல் அதில் மாயா ஓடும் போது வழுக்கி விழுந்துள்ளார். அவர் விழுந்ததை பார்த்ததும் அங்கிருந்த ஜோவிகா, ரவீனா, மணி, பூர்ணிமா ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பின்னர் அவரைப் பார்த்து விஷ பாட்டில் உடைந்ததா என பூர்ணிமா கேட்க, அங்க ஒரே விஷமா இருக்கு பார்த்து போங்க என கூறியபடி மாயா நடந்து வந்தார். அவர் நடந்து வந்ததை பார்த்து ஜோவிகாவும், ரவீனாவும் வயிறுவலிக்க சிரித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வார இறுதியில் விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தனர்.

அப்போது நடைபெற்ற டாஸ்க்கில் அனன்யா ராவ், மாயாவுக்கு விஷ பாட்டில் என்கிற பெயர் கொண்ட பேண்ட்-ஐ மாட்டிவிட்டார். அதில் இருந்து மாயாவை போட்டியாளர்கள் அனைவரும் விஷ பாட்டில் என கிண்டலடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.