மாஸ் காட்டும் நயன்தாரா- ‘அன்னபூரணி’ படத்தின் டிரைலர் வைரல்!

0
169

நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. நயன்தாராவின் 75ஆவது படமாக அன்னபூரணி படம் உருவாகி வருகிறது.

படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிக்க படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் செஃபாக நடிகை நயன்தாரா தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். 

படம் எதிர்வரும் முதலாம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

ட்ரெய்லர் எப்படி இருக்கு?

இந்தியாவிலேயே ‘பெஸ்ட் செஃப்’ஆக வேண்டும் என கனவுடன் இருக்கும் நயன்தாராவுக்கு ‘தெருவுல கிரிக்கெட் விளையாட்ற எல்லோரும் சச்சினாக முடியாது’, ‘பஸ் கன்டெக்டர்ஸ் எல்லோரும் சூப்பர் ஸ்டாராக முடியாது’ என கூறி குடும்பம் ஆதரவளிக்க மறுக்கிறது.

‘புடிச்சத பண்ணா லட்சத்துல ஒருத்தர் இல்ல, லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார்’ ஆகலாம் என தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் நயன்தாரா. ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு ஜெய் – நயன்தாரா – சத்யராஜை ஒரே படத்தில் காண முடிகிறது. ட்ரெய்லர் முழுக்க சமையல் கலைஞராக ஆசைப்படும் நயன்தாராவின் போராட்டமாக கடக்கிறது.