ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசு..!

0
307

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்காவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக, ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷாவிடம், இலங்கை அரசு முறைப்படி மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் சீரழிவுக்கு ஜெய் ஷாவை குற்றம் சாட்டிய ரணதுங்கவின் கருத்துக்கள், அவரிடம் இந்த மன்னிப்பை கோர வைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

“இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவுக்கும் இடையே உள்ள தொடர்பின் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இலங்கை கிரிக்கெட்டை மிதித்து கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளது. ஜெய் ஷாவே இலங்கை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார்.

மன்னிப்பு கோரல்

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தையால்தான் அவர் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.” என்று ரணதுங்க குறிப்பிட்டிருந்தார்.

அர்ஜுனவின் பகிரங்க குற்றச்சாட்டு: ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசு | Sl Govt Has Apologized To Jai Shah

எனினும் இந்த கருத்துக்களுக்காக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் மன்னிப்பு கோரியிருந்தனர்.

மேலும், கிரிக்கெட் விவகாரங்களுக்கான பொறுப்பு வெளிப்புற தாக்கங்களை விட இலங்கை நிர்வாகிகளிடமே உள்ளது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.