முதல்முறை பிரபஞ்ச அழகியாக Nicaragua நாட்டு பெண்!

0
150

2023ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை நிக்கராகுவாவைச் சேர்ந்த ’Sheynnis Alondra Palacios’ வெற்றிப்பெற்றுள்ளார்.

மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சல்வேடார் (El Salvador) நாட்டின் தலைநகரான சென் சல்வேடார் ( San Salvador) நகரில் நடைபெற்ற போட்டியில் ’Nicaragua’-வைச் சேர்ந்த Sheynnis Alondra Palacios 72-வது பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

தாய்லாந்து நாட்டின் ஆண்டோனியோ ப்ரொசில்ட் (Anntonia Porsild) இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் மோராயோ வில்சன் (Moraya Wilson) மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

அதேவேளை நிக்கராகுவாவைச் சேர்ந்தவர் ஒருவர் முதல் பிரபஞ்ச அழகி பட்டம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.