முன்னாள் பிரித்தானிய பிரதமர் புதிய வெளியுறவு செயலாளராக நியமனம்

0
184

முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் புதிய வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது உயர்மட்ட குழுவை மாற்றியமைத்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

57 வயதான டேவிட் கேமரூன் 2010 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டுவரை பிரித்தானிய பிரதமராக பணியாற்றினார். Brexit வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டேவிட் கேமரூன் 2016 ஆம் ஆண்டு தமது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் டேவிட் கேமரூன் எதிர்பாராத வகையில் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார். இதன்படி பிரித்தானிய Downing Street வரலாற்றில் வழமைக்கு மாறாக முன்னாள் பிரதமர் ஒருவருக்கு பதவி வழங்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.