உலக சினிமாவின் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்; அடுத்தடுத்து வெளியாகும் புதிய போஸ்டர்கள்

0
219

நடிகர் கமல்ஹாசன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நேற்றைய தினம் கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள KH234 படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு பிறந்தநாள் பரிசாக வெளியானது. படத்திற்கு Thug Life என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கமலின் பிறந்தநாளையொட்டி Thug Life படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உலக நாயகனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

உலக சினிமாவின் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர். அறிமுக வீடியோவில் இருந்த அதே கெட்டப்பில் இந்த போஸ்டரிலும் கமல் காணப்படுகிறார்.