110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த 16 வயது சிறுமி!

0
198

இந்தியாவில் 16 வயதான சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அபூர்வமான சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் மும்பை மேற்கு, கண்டிவலியை சேர்ந்த 16 வயதான கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து குறித்த சாதனையை படைத்துள்ளார்.

இதனை கொண்டாட கிரிஷாவின் குடும்பத்தினர் பிரம்மாணட விழா நடத்தினர். அதில் ஆன்மீக குருக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த 16 வயதான சிறுமி! | 16 Year Old Girl Made Record Fasting For 110 Days

அவர்கள் “சாதுக்கள் சிலர் மட்டுமே செய்யக்கூடிய சாதனையை கிரிஷா நிகழ்த்தியுள்ளது அசாதாரணமானது” என அந்த சிறுமியை பாராட்டியுள்ளனர்.

இந்த கால கட்டத்தில் கிரிஷாவுக்கு உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படாததால் அவளது ஆன்மீக குருவான முனி பத்மகலாஷ் மகராஜிடம் அனுமதி பெற்று 110 நாட்களுக்கு தனது உண்ணாவிரத்தை நீட்டித்துக் கொண்டார். கிரிஷா உண்ணாவிரதம் தொடங்கிய பிறகு மன வலிமை பெற மத நூல்கள் மற்றும் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தி உள்ளார்.

110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த 16 வயதான சிறுமி! | 16 Year Old Girl Made Record Fasting For 110 Days

மன ஒருமைப்பாட்டுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கிரிஷாவின் செயல் எடுத்துக்காட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.