காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை; ஐ . நா ஒருங்கிணைப்பாளர் கவலை

0
149

கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போர்  முடிவுக்கு வராது இன்று 20 நாட்களாகின்ற நிலையில் காசாவில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை என பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகளின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லைன் ஹாஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை; ஐ . நா ஒருங்கிணைப்பாளர் கவலை | No Place Is Safe Gaza Uncoordinator Is Concerned

பொதுமக்களை பாதுகாக்குமாறும் அவர்கள் எங்கிருந்தாலும் உயிர்பிழைப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதோடு ஹமாஸ் பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் லைன் ஹாஸ்டிங்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வெளியேற்றும் பாதைகள் மீது குண்டுவீச்சு இடம்பெறுகின்ற போது வடக்கு தெற்கு மக்கள் மோதலில் சிக்குப்படும்போது உயிர்பிழைப்பதற்கான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத போது மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்கள் இல்லாத போது மக்களிற்கு அசாத்தியமான வழிமுறைகளை தவிர வேறு எதுவும் இல்லாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.