சாப்பாட்டுக்காக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மாயா, கூல் சுரேஷ்…

0
153

பிக் பாஸ் வீட்டில் சாப்பாட்டிற்காக பிக் பாஸ் வீட்டை விட்டு Small பாஸ் வீட்டிற்கு மாயா மற்றும் கூல் சுரேஷ் சென்றுள்ளார்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.

பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.

இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வருகின்றார். ஆனால் வீட்டின் கேப்டனாக இருந்து வரும் இவரே பல இடங்களில் விதிகளை மீறி வருகின்றார்.

இதனை பிக் பாஸ் தனது பாணியில் கண்டித்து வருகின்றார். தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் உணவிற்காக மாயா மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து Small பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

video source from vijay