ட்விட்டர் பதிவுக்காக பகிரங்க மன்னிப்பு கோரிய கனடிய சட்டமன்ற உறுப்பினர்

0
165

ஒன்றாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் சாரா ஜாமா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இஸ்ரேல் – காஸா போர் தொடர்பில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாரா ஜாமா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். அண்மையில் ஜாமா ட்விட்டரில் இஸ்ரேல் – காசா போர் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் யூத சமூகத்தினர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் ஜாமாவை பதவி விலகுமாறு கோரி இருந்தனர். மாகாண முதல்வர் டக் போர்டிடமும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யூத மத சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் தாம் வெளியிட்ட கருத்துக்காக வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் ஜாமா தெரிவித்துள்ளார்.

சாரா ஜாமா என்டிபி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான வகையிலும் இஸ்ரேலிய மக்களை காயப்படுத்தும் வகையிலும் ஜாமா முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். எனினும் இந்த பதிவு தொடர்பில் எழுந்த சர்ச்சைகளை அடுத்து தமது பதிவிற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் ஹமாஸ் போராளிகளின் தீவிரவாத தாக்குதலை கண்டிப்பதாகவும் காஸா பகுதியில் அடிப்படை வசதிகள் முடக்கப்பட்டதையும் தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.