இஸ்ரேலில் உயிரிழந்த ஜெர்மன் பெண் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல்

0
214

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்பட்ட ஜெர்மன் பெண் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஹமாஸ் போராளிகளால் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்ட 22 வயதான ஜேர்மன் பெண்ணான ஷானி லூக்கின் தாய், தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்புவதாக ஜேர்மன் செய்தி நிறுவனமான Der Spiegel தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் உயிரிழந்த ஜெர்மன் பெண் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல் | German Woman Who Died In Israel Is Alive

 ஹமாஸ் மருத்துவமனையில் உயிருடன் உள்ள மகள்

நேற்றையதினம் செவ்வாயன்று (10) இணையத்தில்  வெளியான  வீடியோ செய்தியில் ஷானியின் தாயார் ரிக்கார்டா லூக், காசா பகுதியில் உள்ள ஒரு குடும்ப நண்பர் தனது மகள் ஹமாஸ் மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக தன்னிடம் கூறினார்.

மேலும், ஷானியை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஜெர்மன் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார். “ஷானி உயிருடன் இருக்கிறார். ஆனால் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இப்போது எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் ஷானி லூக்கின் தாய் கூறியுள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது தனது மகள் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி: