சடுதியாக அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை!

0
147

இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் டாக்டர் சுராஜ் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆரம்பகால நோயறிதல் நோயைக் குணப்படுத்த வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார், நோய்வாய்ப்பட்ட சுமார் 10,000 பெண்களுக்கு முழுமையாக சிகிச்சையளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை! | Breast Cancer Patients Increasing In Sri Lanka

நாளொன்றுக்கு 14 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக பதிவாகின்றனர்.

இந்நிலையை மாற்றியமைக்க 20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்திர மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம் என்றார்.