லியோ விவகாரம்; நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு

0
163

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. டிரைலரில் விஜய் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் கெட்ட வார்த்தை பேசியதாக சர்ச்சையும், விமர்சனமும் கிளப்பியுள்ளது.

இதையடுத்து விஜய்க்கு அனைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “திரையில் சிகரெட் பிடிப்பதால் மக்களும் அதை பிடிக்கிறார்கள் என கூறுவது தவறு, விஜய் பேசியதை விட வெப் தொடர்களில் அதிக கெட்ட வார்த்தைகள் வருகிறது” என தெரிவித்துள்ளார்.