இலங்கை திரையரங்கினை திணற விட்ட விஜய் ரசிகர்கள்; மில்லியன் பார்வையாளர்களை குவித்த ட்ரைலர்!

0
152

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் முதல் முறையாக “ஒருவன் டிஜிட்டல் பிரிவு” Savoy திரையரங்கில் லியோ ட்ரைலரை நேற்று மாலை வெளியிட்டது.

இலங்கையில் முதல் தடவை இப்படி ஒரு சம்பவம் பதிவான நிலையில் ரசிகர்கள் அதனை படம் வெளியீடை போல கொண்டாடி தீர்த்துள்ளனர்.

அதிரடி சண்டை காட்சிகளுடன் ‘இதுக்கு மேல உண்மைய சொல்லனும்னா லியோ தான் உயிரோடி வரணும்’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.