மகிந்தவுக்கு கடாபி வழங்கிய விலைமதிப்பற்ற பரிசு: பல வருடங்களின் பின் வெளிவரும் உண்மை

0
199

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் கொழும்பிலுள்ள லிபிய தூதரகத்திற்கு சென்று இரங்கல் செய்தியை வெளியிட்டு கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

லிபியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் செய்தியை பதிவிட்டிருந்தார்.

அங்கு லிபிய தூதரக அதிகாரி ஒருவரிடம், லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கேணல் கடாபி இருந்திருந்தால் இன்று லிபிய மக்கள் இவ்வாறானதொரு கதியை சந்தித்திருக்க மாட்டார்கள் என மகிந்த தெரிவித்திருந்தார்.

லிபிய மக்கள்

அதன் பின்னர் மகிந்த, விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்த போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் அங்கு வந்திருந்தனர்.

லிபிய தூதரகத்திற்கான பயணம் குறித்து கேட்டதற்கு, கடாபி இருந்திருந்தால், லிபிய மக்கள் இன்று இவ்வளவு அனாதரவாக இருக்க வேண்டியதில்லை என்று நான் அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் கூறினேன் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவுக்கு கடாபி கொடுத்த பெறுமதியான பரிசு: பல வருடங்களின் பின் வெளிவரும் உண்மை | Gaddafi S Gift To Mahinda

இதன் போது மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது லிபியாவிற்கு சென்றதும், மகிந்தவுக்கு கேணல் கடாபி வழங்கிய வரவேற்பும் பற்றிய கடந்த கால கதைகளும் வெளிவந்துள்ளது.

ரோலெக்ஸ் கைக்கடிகாரம்

கடாபி தன்னை மிக உயரிய முறையில் வரவேற்று கடாபியின் நாற்காலியில் அமர்ந்து தோளில் கைபோட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஊடகங்களில் பிரபலமடைந்ததை மகிந்த மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்துள்ளார். இதேவேளை கடாபி தனிப்பட்ட முறையில் மகிந்தவுக்கு வழங்கிய சிறப்புப் பரிசு குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடாபி மகிந்தவிற்கு தயாரித்து கொடுத்த மிகவும் பெறுமதியான ரோலெக்ஸ் கைக்கடிகாரமே அந்த பரிசாகும். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடாபி கடிகாரத்துக்கான ஓடரை தனது சொந்த பெயரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தனிப்பட்ட முறையில் கொடுத்தது பின்னர் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.