ரஜினியின் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்த பிரபலங்கள்

0
198

லைக்கா தயாரிக்கும் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 170’ படத்தில் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

மேலும் ஜெயிலர் படத்தினை தொடர்ந்து அனிருத் ரஜினியுடன் இணைந்துள்ள நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் விவரங்களை லைக்கா வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க இருப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.