பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காதல் ஜோடி

0
167

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகமாக நிகழ்வு பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட இருவர் காதலர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப், நிவிஷா, நிக்சன், மணி சந்திரா, அக்‌ஷ்யா, ஜோவிகா விஜயகுமார், ஆக்‌ஷயா, விஷ்ணு, விசித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன், அனன்யா ராவ், விஜய் வர்மா, பாவா செல்லத்துரை, யுகேந்திரன் என 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

The romantic couple entered the Bigg Boss house

இதில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள மணி சந்திராவுக்கும் ரவீணாவுக்கும் இடையே ஏற்கெனவே நல்ல பழக்கம் இருந்துள்ளது.

இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே இணையத்தில் பேச்சு அடிப்பட்டுள்ள நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இரண்டாவது போட்டியாளராக நேற்று உள்ளே நுழைந்த ரவீணா, மணிசந்திரா வந்ததும் ஓடி வந்து கட்டி அணைந்து வரவேற்றார். இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காதல் ஜோடி என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

The romantic couple entered the Bigg Boss house