Harry Potter திரைப்பட நடிகர் காலமானார்

0
180

பிரபல ஆங்கிலத் திரைப்படத் தொடரான Harry Potterஇல் ‘Dumbledore’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மைக்கல் கேம்பன் (Michael Gambon) காலமானார்.

உயிரிழக்கையில் அவருக்கு வயது 82. இந்நிலையில் நுரையீரல் பிரச்சினையால் அவதியுற்ற அவர் நேற்று முன்தினம் (27 செப்டம்பர்) காலமானார். “சர் மைக்கல் கேம்பனின் இழப்பு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது,” என்று அவரது குடும்பம் தெரிவித்தது.

1940ஆம் ஆண்டில் அயர்லந்தின் டப்ளின் நகரில் பிறந்த மைக்கல் கேம்பன் லண்டனில் வளர்ந்தார். அதேவேளை Harry Potter திரைப்படங்களில் மைக்கலுடன் வேலை செய்தது தமக்குப் பேரின்பத்தைக் கொடுத்ததாக இயக்குநர் ஜே. கே. ரௌலிங் (J.K Rowling) ‘X’ தளத்தில் பதிவிட்டிருந்தார்.  

Harry Potter திரைப்பட நடிகர் காலமானார் | Harry Potter Actor Dies