ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: புள்ளி பட்டியலில் சீனா முதலிடம்

0
194

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி இன்றுடன் ஒருவாரம் கடந்துள்ள நிலையில் சீனா 167 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற வுஷு தற்காப்புக் கலையில் ஆண்களுக்கான 70-,60- மற்றும் 56-கிலோகிராம் இறுதிப் போட்டிகளிலும் பெண்களுக்கான 60- மற்றும் 52-கிலோகிராம் இறுதிப் போட்டிகளிலும் சீன வீர வீராங்கனைகள் பதக்கங்களை கைப்பற்றினர்.

அதற்கமைய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் புள்ளிபட்டியலில் 90 தங்கப்பதக்கங்கள்,51 வெளிப்பதக்கங்கள் 26 வெண்கல பதக்கங்கள் என 167 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்நது தென்கொரியா 24 தங்கப்பதக்கங்கள் 23 வெளிப்பதக்கங்கள் 39 வெண்கலப்பதக்கங்கள் என 86 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முன்றாவது இடத்தில் ஜப்பான் 78 பதக்கங்களுடனும், நான்காவது இடத்தில் உபகிஸ்தான் 31 பதக்கங்களுடனும் ஐந்தாவது இடத்தில் இந்தியா 25 பத்தகங்களுடன் உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா கிட்டத்தட்ட 300 பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.