5 நிமிடத்தில் மணமணக்கும் மசாலா டீ..

0
245

குளிர்காலத்தில் சூடான பானங்களை அருந்தவே அனைவரும் விரும்புவார்கள், அதிலும் தேநீரின் சுவை பலரையும் அடிமையாக்கியுள்ளது.

தினமும் சாதாரண டீ குடிப்பதற்கு பதிலாக மசாலா டீ குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் நம் உடலுக்கு வந்தடைகின்றன.

மசாலா டீ ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையான தேநீர். அதை எப்படி செய்வதென்று பாப்போம்.

தேவையான பொருட்கள்

  • இஞ்சி- சிறிதளவு
  • பட்டை- 5 துண்டு
  • ஏலக்காய் -2
  • லவங்கம் -2
  • டீ தூள்
  • தண்ணீர்- 1 டம்ளர்
  • பால் – 1 டம்ளர் 

masala tea/மசாலா டீ

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் கொதிக்க விட வேண்டும், பின் பட்டை, ஏலக்காய், லவங்கம், இஞ்சி சேர்த்து நன்கு தட்டி கொள்ளவும்.

கொதிக்கின்ற தண்ணீரில் தட்டி வைத்துள்ள பொருள்கள் மற்றும் டீ தூளை சேர்த்து 2 நிமிடம் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் பாலை சேர்த்து 2-3 நிமிடம் வரை கொதிக்க விடவேண்டும்.

இதனை அடுத்து வடிகட்டி தேவையான அளவிற்கு சர்க்கரை சேர்த்தால் ஆரோக்கியமான மற்றும் சுவையான மசாலா டீ தயார்.