அதிக பப்பாளி சாப்பிடுவது ஆபத்து..!

0
239
Ripe papaya fruit in a basket holding by woman hand, Tropical fruit

பப்பாளி பழம் ஒரு ஆரோக்கியமான உணவு, இது நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த உணவாக அமைகிறது.

இருப்பினும், வெறும் வயிற்றில் அதிகப்படியான பப்பாளியை உண்பதால் சிக்கல்களை ஏற்படுத்தும். பப்பாளி பழம் அனைவருக்கும் ஏற்றது அல்ல.

காலையில் வெறும் வயிற்றில் அதிக அளவில் பப்பாளி பழத்தை உண்ணும் போது, உங்கள் உடலைத் தாக்கும் பல்வேறு பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏற்படும் பாதிப்புகள் 

மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ள நோயாளி பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.ஏனென்றால், இதிலுள்ள பாப்பைன் இதயத் துடிப்பை குறைக்கும் திறன் கொண்டது, இது ஆபத்தான இருதய நோய்களைத் தூண்டும்.

heart attack/மாரடைப்பு

ஒரு சிறிய பப்பாளி பழத்தில் 96 மில்லிகிராம் வைட்டமின் சி இருப்பதாக அறியப்படுகிறது. எனவே, வெறும் வயிற்றில் அதிகமான பப்பாளி பழங்களை சாப்பிட்டால், உங்கள் உடலில் சிறுநீரக கற்கள் உருவாகும்.

பப்பாளி பழத்தை அதிகம் சாப்பிடுவது இரைப்பை குடல் அமைப்பை சீர்குலைத்து, வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். பப்பாளியில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Digestion/செரிமானம்

பழத்தில் இருக்கும் என்சைம்கள் குழந்தைக்கு ஆபத்தான விளைவை ஏற்படுத்தலாம். எனவே, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், பப்பாளியைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்.

பப்பாளியில் உள்ள பப்பெய்ன் என்ற நொதி சக்தி வாய்ந்த அலர்ஜியாகும் அதனால் பப்பாளியை வெற்று வயிற்றில் அதிகமாக உட்கொள்வது மூச்சுத் திணறல் மற்றும் நாசிப் பாதைகளின் தொடர்ச்சியான நெரிசல், மார்பு இறுக்கம் போன்ற சுவாசக் கோளாறுகளைத் தூண்டும்.

பப்பாளியில் பப்பெய்ன் என்சைம்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இந்த பழம் அனைத்து தோல் வகைகளுக்கும் பொருந்தாது. இந்த தடிப்புகள் பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் காரணமாக இருக்கலாம்.

பப்பாளியில் உள்ள நார்சத்து, அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். நார்ச்சத்து மலத்துடன் பிணைக்கப்பட்டு நிலைமையை மோசமாகிவிடும்.