10 மாதங்களில் 5 கடிதங்கள்; இலங்கைக்கு அழைத்து வர உதவி கோரும் சாந்தன் தாயார்

0
229

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு மத்திய அரசினால் சாந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

விடுதலையில் பின்னர் இலங்கைக்கு மீள செல்வதற்கான உரிய ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி கடந்த 10 மாத கால பகுதிக்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட தனது மகனை மீள இலங்கைக்கு அழைத்து வந்து தன்னிடம் ஒப்படைக்குமாறு சாந்தனின் தாயார் கடந்த 10 மாத கால பகுதியாக பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் போது அந்த கடிதத்திற்கு இதுவரையில் வெளிவிவகார அமைச்சிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை எனவும் 10 மாத காலப்பகுதிக்குள் 5 கடிதங்களை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியும் பதில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சாந்தனை இலங்கைக்கு அழைத்துவர உதவுமாறு தாயார் கோரிக்கை | Rajiv Gandhi Murder Case