பொலிஸாரை கடுமையாக தாக்கிய மாணவர்கள்; கொழும்பில் சம்பவம்

0
172

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் 2 பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் பாறைகளுடன் கூடிய இடங்களில் குடிபோதையில் சிலர் பாதுகாப்பின்றி நீராடுவதாக கல்கிஸ்ஸ பொலிஸார் கடலோர காவல்படை பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸார் மீது தாக்குதல்

குறித்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, ​​நீராடுவதற்கு தகுதியற்ற வகையில் பாதுகாப்பற்ற இடத்தில் 06 பேர் அவதானிக்கப்பட்டனர்.

கொழும்பில் பொலிஸாரை கடுமையாக தாக்கிய மாணவர்கள் | Student Attack Police In Colombo

பின்னர், அந்த இடத்தில் குளிப்பது பாதுகாப்பற்றது என்று கூறியதையடுத்து, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன்போது, ​​குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியதுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர் கைது

அத்துடன், நிலைமையை கட்டுப்படுத்த மேலும் சில அதிகாரிகள் சென்ற போது, ​​குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

கொழும்பில் பொலிஸாரை கடுமையாக தாக்கிய மாணவர்கள் | Student Attack Police In Colombo

அவர்கள் 16 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள். கைது செய்யப்பட்ட இரத்மலானை, பிலியந்தலை மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.