கனடா இந்தியா அரசுக்கிடையில் கடும் மோதல்; கவலையில் உலக நாடுகள்

0
194

கனடா இந்தியா அரசுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த விவகாரம் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல், தூதரக அதிகாரிகளுக்கெதிரான வன்முறை முதலான விடயங்கள் குறித்துப் பேச, கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நாடு திரும்பிய ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

கனடா பிறப்பித்த அதிரடி உத்தரவு 

கனடா இந்தியா அரசுக்கிடையில் மோதல்: கடும் கவலையில் உலக நாடுகள் | Conflict Between Canada India Governments

இதைத்தொடர்ந்து, மோதல் தீவிரமடைந்த நிலையில் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு பதிலடியாக கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை இந்தியா நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை சார்பில் ட்விட்டர் அல்லது எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், கனடா பிரதமரும், கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சரும் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியா நிராகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.