எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி இல்லையா?பெரிய நடிகர் வாய்ப்பு…!

0
378

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து அண்மையில் காலமானார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் அடுத்து நடிக்க போவது யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Actors

இதனிடையே நடிகர் மாரிமுத்துவுடன் ஒரு படத்தில் அவரது அண்ணனாக நடித்த நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது. இதனிடையே தற்போது நடிகர் பசுபதி, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.