தினமும் காலையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மை..

0
203

ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டதுடன், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் பழங்களில் ஒன்று தான் பேரீச்சம்பழம். இதில் உள்ள பெரும்பாலான கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து வருகின்றதாம்.

பேரீச்சம்பழத்தில், நார்ச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு, தாதுக்கள் அடங்கியுள்ளது. 

காலையில் பேரீச்சம்பழம்

விரைவில் ஆற்றலை அதிகரிக்கும் பேரீச்சம்பழம் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், காலை சிற்றுண்டி அல்லது உடற்பயிற்சிக்கு முன் சிறந்த தெரிவாக இருக்கின்றது.

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதுடன், செரிமானத்திற்கும் உதவுகின்றது. மலச்சிக்கலை தடுக்கின்றது.

தினமும் காலையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? | Every Day Morning Eating Dates Benefits In Tamil

இதில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதாலும், ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதாலும், இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுவதுடன், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.

நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் பேரீச்சம்பழம் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் ஆர்வத்தை குறைக்கின்றது. மேலும் எடையை கட்டுக்குள் வைக்கின்றது.

தினமும் காலையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? | Every Day Morning Eating Dates Benefits In Tamil