மூச்சு திணறுகிறது என்றார்! மறைந்த மாரிமுத்துவின் கடைசி தருணங்களை பகிர்ந்த நடிகர் கமலேஷ்

0
210

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் குறித்து அவருடன் இருந்த நடிகர் கமலேஷ் பகிர்ந்துள்ளார். ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

டப்பிங் பணியில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் சகோதரராக நடித்தவர் நடிகர் கமலேஷ்.

மாரிமுத்து மறைவு குறித்து கமலேஷ் கூறுகையில், மாரிமுத்துவின் இழப்பு ஈடு செய்ய முடியாதத்து. ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை அவர் பெற்றுள்ளார்.

நான் தான் அவருடன் டப்பிங் பணியில் இருந்தேன். அப்போது பாதி பணியின் போது திடீரென மூச்சுத்திணறுவதாகவும், வியர்ப்பதாகவும் கூறி வெளியே சென்றார்.

வெளியில் காற்றுவாங்கிவிட்டு உள்ளே வருவார் என நினைத்தேன், ஆனால் வாகனத்தை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அவர் மகள் எங்களுக்கு போன் செய்து, மாரிமுத்து சூரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூற நான் உடனே விரைந்து சென்றேன். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என சோகத்துடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி: