ஒரே நாளில் ரூ.8,700 கோடி சம்பாதித்த நபர்…

0
187

இந்திய மாநிலம் குஜராத்தின் பெரும் கோடீஸ்வரரும் முகேஷ் அம்பானிக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய செல்வந்தராகவும் அறியப்படும் நபர், ஒரே நாளில் ரூ.8,700 கோடியை சம்பாதித்துள்ளார்.

மொத்த மதிப்பு ரூ.8,700 கோடி

இந்தியாவின் அதானி குழுமம் தொடர்பில் ஹிண்டன்பர்க் ஆயவறிக்கை வெளியாகி, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தபோது, கௌதம் அதானியின் குடும்பம் அதானி பவர் நிறுவனத்தில் 8.1 சதவீத பங்குகளை விற்றுவிட்டது.

அதன் மொத்த மதிப்பு ரூ.8,700 கோடி. அதானி குழுமம் இந்த பங்குகளை இரண்டாம் நிலை பரிவர்த்தனைகள் மூலம் விற்றது. ராஜீவ் ஜெயின் என்பவரது நிறுவனங்கள் அதானி குடும்பத்தினரிடம் இருந்து அந்த பங்குகளை மறைமுகமாக வாங்கியது.

சுமார் 4240 கோடி மதிப்புள்ள பங்குகளை GQG நிறுவனம் வாங்கியது. எஞ்சிய 4.2 சதவீத பங்குகளை இரண்டாம் நிலை பரிவர்த்தனைகள் மூலம் வாங்கியுள்ளது. ஹிண்டன்பர்க் ஆயவறிக்கை வெளியாகும் முன்னர் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடியாக இருந்தது.

ஆய்வறிக்கை வெளியான பின்னர் அதானி குழுமம் கடும் சரிவை சந்தித்தது. மார்ச் 2ல் 7.9 லட்சம் கோடியாக சரிவடைய, ஜூன் 28ல் GQG நிறுவனம் முன்னெடுத்த முதலீடு காரணமாக 10.3 லட்சம் கோடியாக அதிகரித்தது.

வருவாய் 32 பில்லியன் டொலர்கள்

அமெரிக்காவில் குடியேறியுள்ள ராஜீவ் ஜெயின் சுமார் 15,446 கோடி அளவுக்கு அதானியின் நான்கு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். மே 22ல் இவரது நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ரூ.23,129 கோடி என அதிகரித்தது.

ஒரே நாளில் ரூ.8,700 கோடி சம்பாதித்த நபர்... அவரின் மொத்த சொத்து மதிப்பு | Gujarat Richest Man Who Earned 8700 Crore

அதாவது மொத்த முதலீட்டில் 50 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. இதனால் ராஜீவ் ஜெயின் காரணமாக, நெருக்கடியான சூழலிலும் ஒரே நாளில் கௌதம் அதானி ரூ.8700 கோடி தொகையை சம்பாதித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

அதானி குழுமத்தில் இதுவரை ரூ. 35,000 கோடி தொகையை ராஜீவ் ஜெயின் என்பவரது நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கொடீஸ்வரர் என அறியப்படும் கௌதம் அதானி குழுமத்தின் வருவாய் 32 பில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது.

அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 434,600 கோடி என்றே தெரிவிக்கின்றனர்.