உலகின் உயரமான குன்றின் நடுவே அமைந்துள்ள பெட்டிக்கடை!

0
182

சீனாவில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோர் அதன் அசாதாரண இருப்பிடத்தால் நெட்டிசன்களின் வசீகரத்தைக் பெற்று வருகின்றது.

ஒரு குன்றின் மீது உயரமாக அமைந்திருக்கும் இந்த தனித்துவமான கடை சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பார்வையாளர்களை முற்றிலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் அறிமுகமான இந்த கடை, சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பின்ஜியாங் கவுண்டியில் உள்ள ஷினியுஹாய் தேசிய புவியியல் பூங்காவிற்குள் அமைந்துள்ளது.

ஏறுபவர்களின் தேவைகளை மனதில் கொண்டு இந்த புதுமையான கடை உருவாக்கப்பட்டது. சுமார் 393-அடி உயரமான குன்றின் மீது இடைநிறுத்தப்பட்ட இந்த கடை, மலைப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண மரப்பெட்டியின் வடிவத்தை போல் காட்சியளிக்கின்றது .

அதன் நோக்கம் ஏறுபவர்களுக்கு தண்ணீர் மற்றும் தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதைச் சுற்றியே உள்ளது என சொல்லப்படுகின்றது.

மேலும் “உலகின் மிகவும் வசதியற்ற ஸ்டோர்” என்று பெயரிடப்பட்டுள்ளது, இது 120 மீட்டர் உயரத்தில் வியக்கத்தக்க உயரத்தில் பெயருக்கு ஏற்றவாறு காணப்படுகின்றது.