தலிபான்களின் அதிரடி உத்தரவு: அரசியல் கட்சிகளுக்கு தடை

0
173

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் வசம் சென்றதில் இருந்தே அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு வெளியேறியதையடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததுமே, அங்கு கொடூரமான கட்டுப்பாடுகளை கொண்டு வருவார்கள் என அஞ்சிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். ஆனால், தங்களது முந்தைய ஆட்சி காலம் போல தற்போதைய ஆட்சி இருக்காது என்று தலிபான்கள் உத்தரவாதம் கொடுத்தனர்.

ஆனால் இதற்கு நேர்மாறாக உத்தரவாதத்தை பொருட்படுத்தாமல் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டனர். அந்தவகையிலேயே தற்போது அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் அதிரடி உத்தரவு: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள் | Afghanistan Taliban War Latest Update

தேச நலனுக்கு செயற்படாத கட்சிகள்

தலிபான் அரசின் நிதி அமைச்சர் அப்துல் ஹக்கிம் ஷாரேய் செய்தியாளர்களிடம் இது பற்றி கூறுகையில், ” ஷரியத் சட்டத்தின் படி அரசியல் கட்சி என்ற கருத்து இல்லை.

ஷரியத் அடிப்படையில் அரசியல் கட்சிகள் நாட்டில் செயல்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அரசியல் கட்சிகள் தேச நலனுக்காகவோ, தேசம் பாராட்டும்படியோ செயல்படுவதில்லை” என்றார். எனினும் இது குறித்து வேறு விவரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் கட்சிகளுக்கு தலிபான்களின் இந்த முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பாக 71 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தது.

தலிபான்களின் அதிரடி உத்தரவு: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள் | Afghanistan Taliban War Latest Update

பெண்களுக்கு எதிரான சட்டங்கள்

குறிப்பாக பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்கவும் அனுமதி அளிக்கவில்லை.

ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தலிபான்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.