லொஸ்லியாவின் நெருங்கிய தோழியை மணக்கும் கவின்! வைரலாகும் புகைப்படம்!

0
285

பிக் பாஸ் கவின் திருமணம் செய்ய இருக்கும் பெண் லொஸ்லியாவின் நெருங்கிய தோழி என்பதை ரசிகர்கள் கண்டுப் பிடித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக வளம் வந்த கவின் – லொஸ்லியா ஜோடி நிகழ்ச்சிக்கு பிறகு நண்பர்களாக கூட இல்லை. இது நாம் அறிந்த ஒன்றே. இந்நிலையில் பிக் பாஸ் கவீனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் ஒகஸ்ட் மாதம் 20ம் திகதி கவின் திருமணம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில், கவின் திருமணம் செய்ய இருக்கும் பெண் லொஸ்லியாவின் தோழி என புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆராய்ந்து பார்த்ததில் மோனிக்கா ஒரு ஒப்பனையாளராகவும் இருக்கின்றார்.

அவர் லொஸ்லியாவுடன் தொழில் ரீதியாக நண்பர்களாக இருந்திருக்கலாம். எனினும் லொஸ்லியாவுக்கு முன்பே மோனிக்காவுக்கு கவினை தெரியும் என்றும் கூறப்படுகிறது.

லொஸ்லியா மற்றும் கவின் இருவரும் தற்போது தங்கள் வேலைகளில் தீவிரமாக இருக்கின்றனர். இந்த சூழலில் போலி வதந்திகளை பறப்ப வேண்டாம் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.