கழிவுநீரை மறுசுழற்சி செய்து பீர் தயாரித்த அமெரிக்க நிறுவனம்

0
152

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமொன்று கட்டடத்திலிருந்து பெறப்படும் கழிவு நீரை மறுசுழற்சி செய்வதன் மூலமாக பீர் தயாரித்துள்ளது. குறித்த விடயம் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அமெரிக்க நிறுவனமான எபிக் கிளீன்டெக் (Epic Cleantec) என்ற நிறுவனம் 40 மாடி கட்டடம் ஒன்றில் உள்ள ஷவர், சின்க் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீரை பீராக மாற்றியுள்ளது.

உலக அளவில் கிட்டத்தட்ட 14 சதவீத குடிநீரை பிற தேவைகளுக்காக பயன்படுத்தும் மக்கள் அதனை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தாமல் வீணாக்கி வருகின்றனர். இதனை மாற்றும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

1.9 கோடி பாட்டில் தண்ணீர் மறுசுழற்சி

கழிவு நீரை மறுசுழற்சி செய்து பீரை தயாரித்த அமெரிக்க நிறுவனம் | An American Company Ecycled Waste Water Beer

இந்த ஆன்சைட் கிரே வாட்டர் ரீயூஸ் சிஸ்டமானது குளிக்க மற்றும் துணிகளை துவைக்க பயன்படுத்தும் நீர், மொட்டை மாடியில் வீணாகும் மழை நீர் ஆகியவற்றை சேகரித்து அதனை வடிகட்டி, கிருமிநீக்கம் செய்ததற்கு பிறகு பீராக மாற்றுகிறது.

தற்போது சான் ஃபிரான்சிஸ்கோவில் பின்பற்றப்படும் விதிகளின்படி மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பானங்களை சந்தைப்படுத்த முடியாது என்றாலும் கூட இந்த பீரானது ஒரு மிகப்பெரிய முன்னோடியாக மாறி உள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறிகையில், “7570 லிட்டர் கழிவு நீரை பயன்படுத்தி 7 ஆயிரம் பீர் கேன்கள் தயாரித்துள்ளோம். இது விற்பனைக்காக அல்லாமல், ஒரு கல்வி சார்ந்த முயற்சியாகவே இதனை கருதுகிறோம்” என தெரிவித்துள்ளார். 

கழிப்பறையில் குடிநீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றியும் அவர் வாதிட்டுள்ளார். இந்த முறை மூலமாக ஒரு நாளைக்கு 28 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும். அதுவே ஒரு வருடத்திற்கு 94,63,529 லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்யலாம். அதாவது இது 1.9 கோடி பாட்டில் தண்ணீருக்கு சமன் என குறிப்பிட்டுள்ளார்.