தந்தையின் கல்லறையில் இன்னொருவர்,, 500 கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்த சகோதரிகள்!

0
220

அமெரிக்காவில் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கும் இல்லம் ஒன்று, சடலத்தை மாற்றி அடக்கம் செய்ததாக கூறி, சுமார் 500 கோடி ரூபாய் இழப்பீட்டு கேட்டு பாதிக்கப்பட்டவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இன்னொருவரின் உடலை அனுப்பி

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 25ம் திகதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார் 72 வயதான Clifford Zaner. இறக்கும் முன்னர் தமது விருப்பமான கருப்பு ஜீன்ஸ் மற்றும் Led Zeppelin சட்டை அணிவித்து நல்லடக்கம் செய்ய வேண்டும் என குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்

அவர் மரணமடைந்த நிலையில், நியூயார்க் நகரத்திற்கு அவர் உடல் அடக்கம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கும் இல்லமானது தவறுதலாக Clifford Zaner உடலுக்கு பதிலாக இன்னொருவரின் உடலை அனுப்பி வைத்துள்ளது.

அடக்கம் செய்வதற்கு முன்னர் Clifford Zaner பிள்ளைகள் இருவர், கடைசியாக தங்கள் தந்தையின் முகத்தை காண வேண்டும் என கூறி, முகத்தை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தங்களது தந்தை என குறிப்பிட்டுள்ள அந்த உடல் அவரல்ல என தெரிவித்துள்ள அந்த சகோதரிகள், முகத்தில் மீசை இல்லை, உதடு தடித்துப் போயுள்ளது, மாரடைப்பால் மரணமடைந்த தங்களது தந்தைக்கு உடற்கூறு ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

60 மில்லியன் டொலர் இழப்பீடு

ஆனால் அந்த உடலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என பட்டியலிட்டுள்ளனர். தொடர்ந்து தென் கரோலினாவில் உள்ள இறுதிச்சடங்குகள் இல்லத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். அவர்கள் விசாரணை முன்னெடுத்த பின்னர் தவறினை ஒப்புக்கொண்டதுடன், மார்ச் 24ம் திகதி இன்னொரு பகுதியில் Clifford Zaner நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தந்தையின் கல்லறையில் இன்னொருவர்... 500 கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்த சகோதரிகள் | Father Grave Buries Stranger Sisters Lawsuit

இதனையடுத்து அந்த சகோதரிகள் 60 மில்லியன் டொலர் (சுமார் 500 கோடி) இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். எதிர்காலத்தில் இப்படியான தவறு நடக்க கூடாது என்பதற்காகவே, வழக்கு தொடர்ந்துள்ளதாக Clifford Zaner-ன் மகள்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.