சிங்கப்பூரை கலக்கும் மதுபானம்…! ஒரு நாளைக்கு லட்சக் கணக்கில் வருமானம்

0
218

மதுபானம் என்றாலே உலகளவிலான பிரியர்கள் அதிகம். உலக நாடுகளில் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய மதுபான வகைகள் பல உள்ளன. அவற்றில் 1915 எனப்படும் சிங்கப்பூர் ஸ்லிங் வகை மதுபான வகை பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளோம்.

அதுவும் ஒரு நாளைக்கு 2.38 இலட்சம் வருமானம் ஈட்டுகின்றது என்றால் நம்ப முடிகிறதா?

இது கியாம் டாங் பூன் என்ற மதுபான விற்பனையாளரால் கடந்த 1915 ஆம் ஆண்டு பெயண்களுக்கென தனிப்பட்ட ரீதியில் தயாரிக்கப்பட்ட மதுபான வகைதான் சிங்கப்பூர் ஸ்லிங்.

ஆரம்ப காலங்களில் ஆண்களை போல் பெண் மதுபிரியர்களும் அதிகம் காணப்பட்டனர். மதுபானசாலைகளுக்கு சென்று மது அருந்துவது என்பது அவர்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்தும் செயலாக இருந்தது.

எனவே அவர்களுக்கு மதுவிற்கு நிகரான ஒரு பானத்தை தயாரிக்க வேண்டும் என்று கியாம் டாங் பூன் முடிவு செய்தார்.

பலதரப்பட்ட பானங்களை ஒன்று சேர்த்து சிங்கப்பூர் ஸ்லிங் உருவாக்கினார். இதன் சுவை பலருக்கும் பிடித்து போக பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அருந்த தொடங்கினர். இதனையடுத்து சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஸ்லிங் மிகவும் பிரபலமான மதுபானமாக மாறியது.

சிங்கப்பூரின் தேசிய மது வகை என்ற புகழை இன்று வரை தன்வசம் வைத்துள்ளது. அந்நதளவிற்கு சிங்கப்பூர் ஸ்லிங் கேள்வி இன்றுவரையில் குறையவில்லை.

சிங்கப்பூர் ஸ்லிங்கின் ஸ்பெஷல்

இதனை பரிமாறும் அழகே தனி எனலாம். அந்தளவிற்கு நல்ல பெரிய க்ளாஸில், அன்னாசி பழத் துண்டுகளுடன் பரிமாறப்படும்.

கிரனடைன், செர்ரி ஆகியவற்றின் கலப்பால் பார்ப்பதற்கு லைட் லிங் நிறத்தில் இருக்கும். இந்த மதுபான கலவையில் ஜின், அன்னாசி பழ ஜூஸ், எலுமிச்சை பழ ஜூஸ், குரகோவா, பெனடிக்டைன் ஆகியனவும் சேர்க்கப்பட்டிருக்கும்.

100 ஆண்டுகள் தாண்டியும் இதன் சுவை பரிமாறப்பட்டு வருகின்றது. இந்த பானம் தற்போது சிங்கப்பூரின் பிரபல ஹோட்டலான ராஃபெல்ஸில் பரிமாறப்படுகின்றது.

நாள் ஒன்றுக்கு குறைந்தது 1,000 கோப்பைகள் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கோப்பையின் விலை 29 டொலர்களாகும். அதன்படி இந்த பானத்தை விற்பனை செய்வதால் ஒரு நாளைக்கு 2.38 இலட்சம் ரூபாய் (சிங்கப்பூர் பெறுமதி) வருவாயை ஈட்டலாம்.