இலங்கையில் விரைவில் அறிமுகமாகவுள்ள 5 ஜி தொழில்நுட்பம்

0
166

இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் வகையில், 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

மேலும், Digi–Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும். என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,

டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் அல்லது டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகளை ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் ஆரம்பித்துள்ளோம்.

இந்த டிஜி இகோன் (Digi – Econ) என்ற வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் அடுத்த வருட முற்பகுதியில் 5ஜி தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

இவ்வாறு பல வேலைத் திட்டங்களை மையப்படுத்தியே டிஜி இகோன் வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்தார்.